ADDED : செப் 13, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை, சங்கராபுரம் ஆர்.வி.என்.குரூப்ஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் துரை தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்டாலின் வரவேற்றார். முன்னாள் ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்தனன், முன்னாள் இன்னர் வீல் கிளப் தலைவி கலாவதி, ரோட்டரி துணை ஆளுனர் சுதாகரன் முன்னிலை வகித்தனர்.
இந்தியன் ஆயில் நிறுவன கள்ளக்குறிச்சி மாவட்ட விற்பனை அதிகாரி கமலேஷ் முகாமைத் துவக்கி வைத்தார்.
முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர் குழுவினர் 260 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 186 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோயம்புத்துார் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
