/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரங்கப்பனுார் ஊராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை
/
ரங்கப்பனுார் ஊராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை
ரங்கப்பனுார் ஊராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை
ரங்கப்பனுார் ஊராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை
ADDED : ஆக 20, 2025 07:44 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி தலைமை தாங்கினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கண்களில் ஏற்பட்டுள்ள கிட்ட பார்வை, துாரப்பார்வை, நீர் வடிதல், சதை வளர்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
இதில் மாணவர்களுக்கு குறைபாடுகள் இருப்பின் அவர்களுக்கு புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிந்துரை செய்யப்பட்டு பின்பு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.