ADDED : மே 05, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; காணை வி.இ.டி., வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி, புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இணைந்து, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் ஆதரவில் பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
பள்ளி அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் முகாமை துவக்கி வைத்தார். செயலாளர் சந்தான லட்சுமி, துணை தலைவர் துர்கா தேவி, துணை செயலாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குனர் கார்த்தியராஜ் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பங்கேற்ற, 200 பேருக்கு மணக்குள விநாயகர் மருத்துவமனை கண் டாக்டர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட, 30 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.