/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்வில் தோல்வி : மாணவி மாயம்
/
தேர்வில் தோல்வி : மாணவி மாயம்
ADDED : மே 17, 2025 11:50 PM
சங்கராபுரம்: சங்கராபுரம், கள்ளக்குறிச்சி பிரதான சாலையில் வசிப்பவர் ஆல்பர்ட் மரிய சகாயம், 55; இவரது மகள் ஜனனி, 15; இவர், சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியானது. தேர்வில் தோல்வி அடைந்ததால், ஜனனியை பெற்றோர் திட்டி உள்ளனர்.
இதனால் வருத்தத்தில் இருந்த மாணவி, அன்றைய தினம் இரவு பெற்றோருடன் துாங்க சென்றார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, பெற்றோர் கண் விழித்து பார்த்த போது, மாணவியை காணவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.