/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிலப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காததால் பெட்ரோல் கேன்களுடன் வந்த குடும்பத்தினர்; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
/
நிலப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காததால் பெட்ரோல் கேன்களுடன் வந்த குடும்பத்தினர்; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
நிலப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காததால் பெட்ரோல் கேன்களுடன் வந்த குடும்பத்தினர்; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
நிலப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காததால் பெட்ரோல் கேன்களுடன் வந்த குடும்பத்தினர்; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : நவ 05, 2024 06:33 AM

கள்ளக்குறிச்சி ; நிலப்பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்திற்கு 4 லிட்டர் பெட்ரோலுடன் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. நுழைவு வாயிலில் சந்தேகம்படியாக பையுடன் வந்த பொதுமக்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, கையில் பையுடன் வந்த இரு கைக்குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரிடம் போலீசார் சோதனை செய்தபோது, ஒரு லிட்டர் கொள்ளவு கொண்ட 4 பாட்டில்களில் பெட்ரோலுடன் வந்தது தெரிந்தது. உடன் போலீசார் அவர்களிடமிருந்து இருந்து பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.
நிலப்பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சிக்கு வந்தது தெரிந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் போலீசார் பெட்ரோலுடன் வந்த சோமநாதபுரம் சேர்ந்த ரங்கநாதன் மகன் சக்திவேல்,33; உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.
அவர்கள் கொண்டு வந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;
கூத்தக்குடியில் தங்களது தாத்தா ராமசாமி பெயரில் இருந்த 64 செண்ட் இடத்தில் 48 செண்ட இடத்தை ஆறுமுகம் என்பவருக்கு விற்பனை செய்தார். இந்நிலையில் மீதமுள்ள 16 செண்ட் இடத்திற்கான பட்டா ராமசாமி தங்களது தாத்தா பெயரில் இருக்க வேண்டும்.
ஆனால் அவரது பெயரை நீக்கவிட்டு, அதே பகுதியைச் அரசியல் பின்புலம் கொண்ட தனி நபர்கள் இருவர் நிலத்தை அபகரித்து, தங்களை மிரட்டுகின்றனர். இதற்கு வருவாய் துறை அலுவலர்களும் துணையாக உள்ளனர். இது தொடர்பாக பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தங்களது இடத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் உள்ளது.
இதனையடுத்து போலீசார், அனைவரையும் கலெக்டர் பிரசாந்தியிடம் அழைத்து சென்று புகார் மனு கொடுக்க செய்தனர். பின்னர் போலீஸ் ஸ்டேஷனக்கு அழைத்து சென்று அவர்கள் மீது வழக்கு பதிந்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.