/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மானிய விலையில் பண்ணை பொருட்கள்
/
மானிய விலையில் பண்ணை பொருட்கள்
ADDED : பிப் 23, 2024 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் 50 சதவீத மானியத்துடன் பண்ணை உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.
ரிஷிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர் செய்திக்குறிப்பு: பகண்டைகூட்ரோட்டில் இயங்கி வரும், ரிஷிவந்தியம் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில், மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள், இரும்புசட்டி, களைக்கொத்தி, தார்பாய் போன்ற பண்ணை பொருட்கள் 50 சதவீத மானியத்தில் கிடைக்கும். தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.