/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குருணை மருந்து குடித்து விவசாயி தற்கொலை
/
குருணை மருந்து குடித்து விவசாயி தற்கொலை
ADDED : ஜூலை 01, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் குருணை மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, ஏமப்பேரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 51; விவசாயி. இவரது மூத்த மகன் சில மாதங்களுக்கு முன் இறந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி மதுபோதையில் இருந்த சீனிவாசன் குருணை மருந்தினை குடித்துள்ளார்.
உடன் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.