/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
/
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ADDED : டிச 31, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், 71; இவர், கடந்த 28ம் தேதி, தனது நிலத்தில் களை யெடுக்கும் பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, ராஜகோபால் வைத்திருந்த மண்வெட்டி தரையில் பதிந்திருந்த மின்சார ஒயர் மீதுபட்டது. இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ராஜகோபால் இறந்தார். தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ராஜகோபாலின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

