ADDED : ஜன 26, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர் : மரத்தில் தழை கழித்த விவசாயி மின்சாரம் தாக்கி இறந்தார்.
அரகண்டநல்லுார் அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி, 56; நேற்று மதியம் தனது நிலத்தில் உள்ள கோழிப்பண்ணையை சுற்றி இருக்கும் மரத்தில் தழை கழித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தழை மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் கணபதி துாக்கி வீசப்பட்டார்.
உடன் அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை டாக்டர் பரிசோதித்து, ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து அவரது மகன் கஜேந்திரன், 26; கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

