ADDED : டிச 25, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி ;கள்ளக்குறிச்சி அருகே லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி நீலமங்கலத்தை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன்,37; விவசாயி. இவர், நேற்று மதியம் 2:00 மணியளவில் ஸ்கூட்டியில் கள்ளக்குறிச்சியிலிருந்து நீலமங்கலத்திற்கு சென்றார். கூத்தக்குடி சாலையில் சென்றபோது, எதிர்திசையில் வந்த லாரி, வெங்கடேசன் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் லாரியின் முன்பக்க டயரில் சிக்கி படுகாயமடைந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.