/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெட்ரோல் பாட்டிலுடன் விவசாயி போராட்டம்
/
பெட்ரோல் பாட்டிலுடன் விவசாயி போராட்டம்
ADDED : பிப் 18, 2025 05:59 AM

திருக்கோவிலுார்; முறைகேடாக பட்டா வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து திருக்கோவிலுார் தாலுகா அலுவலகம் எதிரே விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருக்கோவிலுார் அடுத்த செங்கனாங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 35; அதே ஊரைச் சேர்ந்தவர் சரவணன். இருவருக்குமிடையே நிலம் தொடர்பான வழக்கு திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சரவணனுக்கு வழக்கு தொடர்பான சொத்துக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வருவாய்த் துறையினரின் ஒருதலைப் பட்சமான பட்டா வழங்கியதை கண்டித்து சவுந்தரராஜன் நேற்று மாலை 3:20 மணி அளவில் சந்தைப்பேட்டையில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரே திருக்கோவிலுார்- ஆசனூர் சாலையில் பெட்ரோல் பாட்டிலுடன் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த திருக்கோவிலுார் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் பரபரப்பு நிலவியது.