/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகள் அதிக ஆர்வம்
/
சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகள் அதிக ஆர்வம்
ADDED : ஜூலை 03, 2025 02:54 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையில், புதுப்பாலப்பட்டு, அரசம்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி ஆகிய மலை கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் சின்ன (சாம்பார்) வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். 3 மாத பயிரான இதற்கு தண்ணீர் மற்றும் பராமரிப்பும் குறைவு. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய, ரூ.40 ஆயிரம் செலவாகும் என்பதால் அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு 2500 கிலோ வெங்காயம் கிடைக்கும். அறுவடை செய்யும் வெங்காயத்தை திருவண்ணாமலை, சேலம், பெங்களுரூ, ஆகிய பகுதி வியாபாரிகள் விவசாய பகுதிகளுக்கு நேரில் வந்து அறுவடை செய்து, வெங்காயத்தின் அளவை பொருத்து ஒரு கிலோ ரூ. 30 மற்றும் ரூ. 35 வரை விலை நிர்ணயித்து, மொத்தமாக வாங்கி செல்கின்றனர் என கூறினார்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு அலைச்சல் இன்றி அறுவடை செய்யும் நாட்களிலேயே கைமேல் காசு கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் வருடம்தோறும் சாம்பார் வெங்காய சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. தற்போது சாகுபடி செய்துள்ள வெங்காய பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.