/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தரமற்ற விதைகள் வழங்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி! வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
/
தரமற்ற விதைகள் வழங்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி! வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
தரமற்ற விதைகள் வழங்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி! வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
தரமற்ற விதைகள் வழங்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி! வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ADDED : அக் 21, 2024 10:37 PM

உளுந்தூர்பேட்டை : வேளாண்துறை சார்பில் வினியோகிக்கப்படும் தரமற்ற விதைகளால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். ஆனால்100 நாள் வேலை திட்டத்தால் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமலும், விவசாயத்திற்கு தேவையான பொருட்களின் விலையேற்றத்தாலும், விவசாய பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாய தொழிலை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தனை சிரமத்திற்கிடையே விவசாய தொழில் செய்தாலும், வேளாண் துறை சார்பில் மானியத்தில் விதைகள் வழங்கப்படுவதாக கூறி விதைகளுடன் மருந்து பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வினியோகிக்கின்றனர்.
தர மற்ற கலப்பட விதைகளை வினியோகித்து வருவது விவசாயிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்ட நெல் விதைகள் நாற்று பருவத்திலேயே நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.உளுந்து விதைகளை தரமற்ற கலப்பட உளுந்து விதைகளாக வினியோகித்து வருகின்றனர்.இதனை வாங்கி சென்ற விவசாயிகள் பார்த்தபோது கலப்பட உளுந்து விதையை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை, எறையூர் வேளாண்துறை அலுவலகத்தில் முறையிட்டபோது வேளாண் துறை அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல் வழங்கிய உளுந்து விதைகளை மாற்றி தருவதாக கூறி விவசாயிகளை அலைகழித்தனர்.
எனவே வேளாண்துறை சார்பில் தரமான, மானியத்தில் விதைகள் வழங்கப்படுகிறதா என உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து விவசாய சங்க நிர்வாகி அன்புமணி கூறுகையில், கடந்த 12ம் தேதி வம்பன் என்ற விதை உளுந்தினை எறையூர் வேளாண்துறை அலுவலகத்தில் வாங்கினேன். உளுந்தை விதைப்பதற்காக பிரித்த போது விதை உளுந்தானது முற்றிலும் தரமற்று இருந்தது.
உளுந்து குறியீட்டு அளவை விட மிகவும் சிறியதாக இருந்தது. சல்லடையில் சளித்த போது மிக மிக சிறிய அளவிலான கப்பி உளுந்து பிரித்து எடுத்தபோது தரமற்றதாக இருந்தது.
இதேபோல் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தரமற்ற விதை உளுந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் ' என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்க்கின்றனர்.