/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : டிச 19, 2024 01:08 AM

காட்டுமன்னார்கோவில் : வெள்ளம் பாதித்த காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் பார்வையிட்டு, சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
கனமழை, வெள்ளப் பெருக்கினால் எடையார், திருநாரையூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் சம்பா நெல் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீதம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிராமங்களை பேரிடர் பாதிக்கப்பட்ட கிராமங்களாக அறிவிக்க வேண்டும்.
நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 செலவாகும். ஆனால் அரசு ரூ. 17,000 அறிவித்திருப்பது 'யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. இதை மறுபரிசீலனை செய்து ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

