/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 22, 2024 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில், விவசாய பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் கோரிக்கை ஆர்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வீரன் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூ., எம்.எல்., மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் அய்யன்துரை சிறப்புரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜான், துணைச் செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் சேட்டு, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.