/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மஞ்சள் பயிருக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய... கோரிக்கை ; பொங்கல் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
மஞ்சள் பயிருக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய... கோரிக்கை ; பொங்கல் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
மஞ்சள் பயிருக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய... கோரிக்கை ; பொங்கல் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
மஞ்சள் பயிருக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய... கோரிக்கை ; பொங்கல் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 08, 2025 05:08 AM
உளுந்துார்பேட்டை : விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் வகையில் மஞ்சள் பயிருக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
உளுந்துார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய தொழிலை முக்கிய தொழிலாக கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் உளுந்துார் பேட்டை அடுத்த எறையூர், எல்லைகிராமம், தேன்குணம், கூவாடு நெய்வனை, கிளியூர், ரகுநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிர் சாகுபடி நடந்து வருகிறது. மஞ்சள் பயிர் வைகாசி, ஆனி மாதங்களில் பயிரிடப்பட்டு மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
ஒரு ஏக்கரில் 3.50 டன் (35 மூட்டை) விளையக் கூடிய மஞ்சள் பயிர் வைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய்வரை செலவாகும் அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் பயிரானது.
100 கிலோ கொண்ட ஒரு மூட்டை குறைந்த பட்சமாக 15 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றை அறுவடை செய்து காயவைத்து பதப் படுத்தி உளுந்துார் பேட்டை பகுதியில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆத்துார் மஞ்சள். பருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது. இல்லையேல் தனியார் கமிட்டியான உளுந்துார்பேட்டையில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு பகுதிக்கு விற்பனைக்காக எடுத்து செல்லவேண்டியுள்ளது.
தனியார் கமிட்டியில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் வியாபாரிகளுக்கு 10 சதவீதம் கமிஷனை விவசாயிகள் தர வேண்டியுள்ளது. அதேபோல் ஆத்துார் கமிட்டியில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் 2 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இரவு பகல் பாராமல் உழைத்து பயிரிட்டு அறுவடை செய்த மஞ்சள் பயிரை பல கிலோமீட்டர் தொலைவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டி உள்ளது. உளுந்துார்பேட்டை அல்லது கள்ளக்குறிச்சி பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்த மஞ்சளை விற்பனை செய்வதற்கு மஞ்சள் விற்பனை கமிட்டி அமைக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நெல் உள்ளிட்ட மற்ற பயிர் வகைகளுக்கு அரசின் மானியம், மானிய விதைகள் வழங்குவது போல் மஞ்சள் பயிர் விவசாயிகளுக்கு மானியம், மானிய விதைகளை வழங்க வேண்டும் என மஞ்சள் பயிர் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் வகையில் மஞ்சள் பயிருக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்வதோடு, அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், பொங்கல் பண்டிகை காலங்களில் கரும்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் மஞ்சளுக்கும் முக்கியத்துவம் வழங்கி மஞ்சளையும் பொங்கல் தொகுப்பாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.