/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
25ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
/
25ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
ADDED : ஏப் 23, 2025 05:57 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 25ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 25ம் தேதி காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் வேளாண், உழவர் நலன், தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள், வங்கியாளர்கள் மற்றும் பிறசார்பு துறை அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.