/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : மே 28, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நாளை மறுதினம் நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகத்தில் மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.
விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர், தங்கள் குறைகள், கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து பேசி, மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மே மாதத்திற்கான குறைதீர் கூட்டம் நாளை நடக்க இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் அந்த கூட்டத்தை ரத்து செய்வதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.