/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செழிப்பாக வளர்ந்த மக்காசோளம் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
செழிப்பாக வளர்ந்த மக்காசோளம் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
செழிப்பாக வளர்ந்த மக்காசோளம் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
செழிப்பாக வளர்ந்த மக்காசோளம் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 22, 2025 10:01 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மழை காரணமாக மக்காசோளம் செழிந்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு, நெல், மரவள்ளி, மஞ்சள், எள், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல் மக்காச்சோளம் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், கச்சிராயபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடப்பாண்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டுள்ளது.
அறுவடைக்கு பின் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டிகளுக்கு மட்டுமே அதிகளவில் மக்காசோளம் வரத்து காணப்படும். ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். தற்போது மார்க்கெட் கமிட்டிகளில் ஒரு மூட்டை மக்காசோளம் சராாசரியாக தற்போது ரூ.2,260 விலை போகிறது. மூன்று மாத கால பயிரான மக்காசோளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் செழித்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சில இடங்களில் தற்போது அறுவடை பணிகளும் துவங்கி உள்ளது.