/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாம்பார் வெங்காய சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
/
சாம்பார் வெங்காய சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
ADDED : மார் 17, 2025 05:22 AM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் சாம்பார் வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கல்வராயன் மலை அடிவார கிரமங்களான பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி, கள்ளிப்பட்டு, ஆனைமடுவு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள், குறுகிய கால பயிரான சாம்பார் வெங்காயத்தை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த வெங்காயத்தை அறுவடை நாட்களில் சேலம், ஈரோடு, திருச்சி, வேலுார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், கிலோ 35 முதல் 40 ரூபாய் வரை கொடுத்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். அலைச்சல் இல்லாமல் அறுவடை நாட்களிலேயே, கை மேல் காசு கிடைப்பதால், இப்பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.