/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்காசோளம் சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
/
மக்காசோளம் சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 02, 2025 10:55 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த மரவள்ளி, கத்தரி, தக்காளி உட்பட பல்வேறு வகையான பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர். இதில் மக்காச்சோளம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விவசாயிகள் பயிரிடுவது வழக்கம்.
குறைந்தளவு தண்ணீரே போதுமானதாக உள்ள மக்காச்சோளத்தை, மூன்று மாதத்தில் அறுவடை செய்து, விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். மாவட்டத்தில் மக்காசோளம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆண்டுதோறும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது பெரும்பாலான விவசாய நிலங்களில் மக்காசோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மார்க்கெட் கமிட்டிகளுக்கு மக்காசோளம் வரத்து அதிகரித்துள்ளது. கமிட்டியில் 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம், சராசரியாக 2,336 ரூபாய்க்கு விலை போனது.