/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் மக்காசோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
கல்வராயன்மலையில் மக்காசோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கல்வராயன்மலையில் மக்காசோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கல்வராயன்மலையில் மக்காசோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : செப் 23, 2024 11:53 PM

சங்கராபுரம் : கல்வராயன்மலையில் மக்காசோளம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கல்வராயன்மலையைச் சேர்ந்த புதுபாலப்பட்டு, மோட்டாம்பட்டி, தும்பை, பாச்சேரி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் 1000 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாத பயிரான மக்காசோளத்தினை உணவிற்காகவும், கோழி தீவனத்திற்காகவும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோழிப்பண்ணையால் மக்காசோளத்தில் தேவையும் அதிகரித்து வருகிறது.
குறைந்த செலவு, நீர் மற்றும் குறுகிய காலத்தில் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மக்காசோளம் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேளாண்துறையும் மக்காசோளம் சாகுபடி செய்ய வீரிய ஒட்டு விதைகள், உயிர் உரங்கள், யூரியா, உள்ளிட்ட இடு பொருட்களை ஒரு ஏக்கருக்கு 6,000 ரூபாய் மானியத்தில் வழங்கி வருகிறது.