/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
/
சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஏப் 21, 2025 05:36 AM
சங்கராபுரம் : கல்வராயன்மலையில் சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் விவசாயிகள் பல ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். கல்வராயன்மலையில் உள்ள புது பாலப்பட்டு, பழைய பாலப்பட்டு, அரசம்பட்டு, மோட்டாம்பட்டி, தும்பை, பாச்சேரி உள்ளிட்ட பல கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறைந்த தண்ணீர், பராமரிப்பு செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக, 3 மாத பயிரான இந்த வெங்காயத்தை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இங்கு அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை சேலம், திருச்சி, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விளைநிலத்திற்கே வந்து, வாங்கி செல்கின்றனர். இங்கு கிலோ, ரூ.30 முதல் 35 வரை, விற்பனை செய்யப்படுகிறது.
அறுவடை சமயத்தில் அலைச்சலின்றி கைமேல் காசு கிடைப்பதால், விவசாயிகள் வெங்காய சாகுபடியில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.

