/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆவண மோசடியால் கைமாறும் விளை நிலங்கள்; மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயிகள் அலறல்
/
ஆவண மோசடியால் கைமாறும் விளை நிலங்கள்; மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயிகள் அலறல்
ஆவண மோசடியால் கைமாறும் விளை நிலங்கள்; மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயிகள் அலறல்
ஆவண மோசடியால் கைமாறும் விளை நிலங்கள்; மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயிகள் அலறல்
ADDED : ஏப் 22, 2025 06:39 AM
மூங்கில்துறைப்பட்டு அருகே ஆவண மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலை மாவட்ட நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சியில் ஆவண மோசடி கும்பல் அட்டகாசம் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் இடங்களை அவர்களுக்கே தெரியாமல் மற்றவர்களுக்கு பட்டா சிட்டா மாற்றம் செய்து அவற்றினை வருவாய் கணக்கில் சேர்ப்பது.
அதுமட்டுமின்றி இடமே இல்லாதவர்களுக்கு அடுத்தவர் இடத்தில் கூட்டாக இணைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடி கும்பலுக்கு வருவாய்த்துறையும் துணை போவதாகவும், பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் செய்து தருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே போல் ரங்கப்பனுாரில் மோசடியில் ஈடுபட்ட பட்டாக்களை டி.ஆர்.ஓ., பவித்ரா மூலம் ரத்து செய்து உரிய நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
தற்போது மீண்டும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வரும் கும்பலை மாவட்ட நிர்வாகம் களை எடுத்தால் மட்டுமே விவசாயிகளை காக்க முடியும்,
விவசாயிகள் தங்கள் நிலம் எப்படி அடுத்தவருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
சில இடங்களில் அடிதடி, நீதிமன்றம் என வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரங்கப்பனுார் மற்றும் மல்லாபுரம் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக பதிவேட்டினை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இந்த குற்ற பின்னணியில் யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.