/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கம்
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கம்
ADDED : ஆக 09, 2025 11:30 PM

கள்ளக்குறிச்சி: சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு அ.பாண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த அ.பாண்டலத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இப்கோ தமிழ்நாடு மாநில விற்பனை மேலாளர் சுரேஷ் பங்கேற்று, நானோ யூரியா, நானோ டி.ஏ.பி., மற்றும் நானோ பொட்டாஷ் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நானோ யூரியா பயன்படுத்துவதால் மகசூல் அதிகரிக்கும், ட்ரோன் பயன்படுத்தி நானோ யூரியா தெளித்தால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். விவசாயிகளுக்கு செலவினங்களும் குறையும். குறிப்பாக, மண் வளத்தையும் பாதுகாக்கலாம். எனவே விவசாயிகள் அனைவரும் நானோ யூரியா பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, நானோ யூரியா பயன்படுத்தியால் லாபமடைந்த விவசாயி, கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்து ரூ.1 லட்சம் முதலீடு செய்து, அதற்கான ரசீதினை பெற்றார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சக்திவேல், இப்கோ கள அலுவலர் கவுதம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.