ADDED : அக் 25, 2025 07:04 AM
தியாகதுருகம்: கணங்கூர் ஊராட்சியில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம் நடந்தது.
தியாகதுருகம் வட்டார வேளாண் அலுவலகம் சார்பில் நடந்த முகாமிற்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) ரகுராமன், ஊராட்சி தலைவர் சசிகலா முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் சிவநேசன் வரவேற்றார்.
முகாமில், விவசாய அடையாள அட்டை எண் பதிவு செய்வதன் அவசியம், பி.எம்., கிசான் திட்டத்தில் இடையில் நிறுத்தப்பட்ட பயனாளிகள் தகுதி இருப்பின் மீண்டும் உதவித்தொகை பெறுவது குறித்த வழிமுறைகள். சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடுகள், பயிர் காப்பீடு உழவரைத் தேடி வேளாண் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
உதவி வேளாண் அலுவலர் அப்துல் ஹமீது, கரும்பு அலுவலர் ஸ்டீபன் ஜெயக்குமார், உதவி கரும்பு அலுவலர் வெங்கடேசன், கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வேலு, மார்க்கெட் கமிட்டி இளநிலை உதவியாளர் தேவராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கலைவாணன், சுதாகர், கிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

