ADDED : டிச 29, 2024 06:36 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே தகராறில் மகனை வெட்டிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் வட்டம் மூரார்பாளையம் அடுத்த பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி,50; விவசாயி. இவரது மகன் சரத்குமார், 25; திருமணமாகவில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து சரத்குமார், வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வருவது வாடிக்கை.
நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சரத்குமார், தனது தந்தை கொளஞ்சியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கொளஞ்சி, மகன் சரத்குமாரை கொடுவாளால் வெட்டியதில், தலை, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அருகில் இருந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து கொளஞ்சியை கைது செய்தனர்.