ADDED : நவ 10, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சிறுவங்கூரில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன் மகள் கவிபிரியா,18; இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.டெக்., முதலாமாண்டு படிக்கிறார். தீபாவளி விடுமுறைக்காக கவிபிரியா வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி வீட்டிலிருந்த வெளியே சென்ற கவிபிரியா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் கவிபிரியாவை தேடினர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் காணாமல் போன மகள் கவிபிரியாவை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை சிவகுருநாதன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.