ADDED : ஆக 18, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன தந்தையை கண்டுபிடித்து தரக்கோரி மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 42; இவர் கடந்த 14ம் தேதி அசகளத்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் முருகன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது மகன் அஜித்குமார் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
