/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பழுதாகிய சாலையோர மின்விளக்கு இரவு நேரங்களில் விபத்து அபாயம்
/
பழுதாகிய சாலையோர மின்விளக்கு இரவு நேரங்களில் விபத்து அபாயம்
பழுதாகிய சாலையோர மின்விளக்கு இரவு நேரங்களில் விபத்து அபாயம்
பழுதாகிய சாலையோர மின்விளக்கு இரவு நேரங்களில் விபத்து அபாயம்
ADDED : செப் 30, 2024 06:39 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் பழுதாகியுள்ள சாலையோர மின் விளக்குகளை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் மார்க்கமாக தினமும் லாரி, பஸ், கார், பைக் என 3000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. இதில், விநாயகா நகர் பகுதியில் இருந்து கோமுகி ஆறு வழியாக ஏ.கே.டி., பள்ளி வரை சாலையோரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகிறது.
குறிப்பாக, கோமுகி ஆற்று பாலத்தில் மின்விளக்குகள் இல்லை. இதனால், இரவில் அப்பகுதி முழுதும் கும்மிருட்டாக காணப்படுகிறது. போதிய வெளிச்சம் இல்லாததால், அப்பகுதியில் உள்ள 3 வளைவுகளில் விபத்து ஏற்படும் அபாயம் நீடித்து வருகிறது.
தியாகதுருகம் சாலையில் விநாயகா நகரில் இருந்து கோமுகி ஆற்று பாலம் வரை உள்ள பகுதி கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லையிலும், பாலத்தில் இருந்து ஏ.கே.டி., வரை உள்ள பகுதி நீலமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் எல்லை பகுதியாக இருப்பதால் பழுதடைந்த மின்விளக்குகள் சரிசெய்யப்படாமல் உள்ளது. விபத்து அதிகரிக்கும் முன் அப்பகுதியில் பழுதாகி உள்ள மின்விளக்குகளை சரிசெய்திடவும், கோமுகி ஆற்று பாலத்தில் புதிய மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.