/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி அருகே உடைந்த மின் கம்பத்தால் அச்சம்
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி அருகே உடைந்த மின் கம்பத்தால் அச்சம்
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி அருகே உடைந்த மின் கம்பத்தால் அச்சம்
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி அருகே உடைந்த மின் கம்பத்தால் அச்சம்
ADDED : அக் 29, 2025 08:20 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கம்பம் உடைந்த நிலையில் இருப்பதால் மாணவ மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நுாற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள் வந்து செல்கின்றனர். இக்கல்லுாரியின் அருகே மின்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பாஸ்மர் மின்கம்பம் பாதி உடைந்த நிலையில் உள்ளது. இதனால் வலுவிழந்த மின்கம்பத்தினால் ஏதேனும் விபத்து ஏற்பட்டுவிடுமோ என மாணவ மாணவிகள் அச்சம் அடைகின்றனர். மாணவ மாணவிகள் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் அரைகுறையாக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.