/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாய்ந்து வரும் மின் கம்பத்தால் அச்சம்
/
சாய்ந்து வரும் மின் கம்பத்தால் அச்சம்
ADDED : ஜன 23, 2026 06:36 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் , காமராஜர் வீதியில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருக்கோவிலுார், என்.ஜி.ஜி.ஓ., நகர், காமராஜர் வீதியில் மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. கம்பத்தின் அடிப்பாகம் பலமிழந்ததால், அப்பகுதியை சிமென்ட் கலவை மூலம் பூசி வைத்துள்ளனர். என்றாலும் கம்பம் சாய்ந்து கொண்டே செல்வதால், பலமான காற்று வீசினால் மின்கம்பம் சாயும் அபாயம் உள்ளதாக அப்பகுதியில் வகிப்பவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மின்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாய்ந்த கம்பத்திற்கு மாற்றாக புதிய கம்பத்தை நட்டு விபத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

