/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களுக்கு கட்டண சலுகை
/
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களுக்கு கட்டண சலுகை
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களுக்கு கட்டண சலுகை
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களுக்கு கட்டண சலுகை
ADDED : டிச 25, 2024 03:43 AM

கள்ளக்குறிச்சி : ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் கட்டண சலுகைக்கு, தேர்வாகிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கட்டண சலுகை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கல்வி கட்டண சலுகைக்கான சிறப்பு தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தேர்வில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டண ஸ்காலர்ஷிப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி கட்டண சலுகை வழங்கினார்.
நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா முன்னிலை வகித்தார். பள்ளியின் நீட் இயக்குனர் அஞ்சப்பெல்லி ஷ்ர்வன்குமார் வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் நான்சிமாதுளா நன்றி கூறினார்.