/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.14 லட்சம் கையாடல் பெண் காசாளர் கைது
/
ரூ.14 லட்சம் கையாடல் பெண் காசாளர் கைது
ADDED : ஜன 25, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அடுத்த பத்தியாபேட்டையில் ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் காசாளராக உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணி மனைவி ஆனந்தி, 37; பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 2023 -24ம் கல்வியாண்டில் பள்ளியில் 14 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளது கணக்கு தணிக்கையின் போது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஆனந்தி பணத்தை திருப்பி தருவதாக கூறியவர் திடீரென தலைமறைவானார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தியை நேற்று கைது செய்தனர்.

