நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, விளாந்தாங்கல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முபாரக்அலி மனைவி ஆயிஷா,23; இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை 7:00 மணியளவில் வீட்டில் மின்விசிறியில் ஆயிஷா துாக்கு போட்டுக் கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆயிஷா இறந்தார்.
ஆயிஷாவின் தாய் செந்தில்குமாரி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.