/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் ஐம்பெரும் விழா
/
சின்னசேலத்தில் ஐம்பெரும் விழா
ADDED : ஏப் 01, 2025 04:52 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம், தமிழ் சங்கம் சார்பில், அரிசி ஆலை அரங்கில் ஐம்பெரும் விழா நடந்தது.
ஒளி நிறுவனர் சக்திகிரி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் அம்பேத்கர், அசோகன், ரத்தினவேலு, ராஜா, பன்னீர்செல்வம், இதயம் கிருஷ்ணா, தனவேல் முன்னிலை வகித்தனர். கவிஞர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பெண் தலைவர்கள் படத்தினை திறந்து வைத்து சங்க தலைவர் கவிதைத்தம்பி வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் வாணிதாசன் கொள்ளு பேத்தி வளர்மதி முருகன், 28 பெண்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
கவிஞர்கள் கலியன், வாசுதேவன் கவியுரை வாசித்தனர். கவிஞர் வாசுகி பொன்னரசு தலைமையில், பெண் கவிஞர்கள் கவியரங்கம் நடந்தது. அருணா தொல்காப்பியன், சண்முக பிச்சப்பிள்ளை ஆகியோரின் தமிழ்ப்பணி பாராட்பட்டது. தொடர்ந்து, 50 பெண் தொழிலாளர்களுக்கு புத்தாடைகளை ஆசிரியர் முருகன், காப்பாளர் கருப்பன் வழங்கினர். ஆறுமுகம் நன்றி கூறினார்.

