/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
/
விவசாயி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
ADDED : நவ 10, 2025 11:03 PM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே திருவிழாவில் கரகம் துாக்கிச் சென்றபோது, மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
உளுந்துார்பேட்டை அடுத்த கீழ்புத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் செந்தில்குமார், 36; இவர், கடந்த 6ம் தேதி முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் கரகம் துாக்கிச் சென்றார்.
அப்போது, அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த செந்தில்குமார் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையொட்டி செந்தில்குமார் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

