/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
/
நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
ADDED : ஜன 20, 2025 04:15 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் மோகன், 29; திருக்கோவிலுாரில் உள்ள கிராம சக்தி வங்கியில் நான்கு ஆண்டுகளாக பணம் வசூல் செய்யும் பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
அப்பொழுது ரூ. 3 லட்சம் பாக்கி கட்ட வேண்டும் என வங்கியின் பொது மேலாளர் பாரதி, விக்னேஷ் ஆகியோர் தொல்லை செய்து வந்ததால் மனவேதனையில் இருந்த மோகன், கடந்த 13ம் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் கடந்த 17 ம் தேதி இறந்தார்.
திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.