ADDED : நவ 01, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே வைக்கோல் கட்டு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
உளுந்துார்பேட்டை, உளுந்தாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயி. இவர், வீடு அருகே 100 கட்டு வைக்கோல் கட்டு களை வைத்திருந்தார். நேற்று காலை 11:30 மணியளவில் வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த உளுந்துார் பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 40க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் தீ விபத்தில் சேதமடைந்தன.
உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.