/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கரும்பு தோட்டத்தில் தீ; 2 ஏக்கர் எரிந்து சேதம்
/
கரும்பு தோட்டத்தில் தீ; 2 ஏக்கர் எரிந்து சேதம்
ADDED : அக் 10, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்புகள் எரிந்து சேதமானது.
சங்கராபுரம் அடுத்த கிடங்கன்பாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் கணபதி. விவசாயி. இவர் வயலில் பயிரிட்டிருந்த கரும்பு தோட்டம் நேற்று மதியம் 12:00 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு தீயில் எரிந்து சேதமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.