/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : அக் 03, 2024 11:37 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நிலைய அலுவலர் (போக்குவரத்து) சக்திவேல், சிறப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
அதில், தீ விபத்தில்லாத வகையில் தீபாவளியை கொண்டாடுவது, தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயை அணைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, தீ விபத்தில் இருந்து பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து எடுத்துரைத்தனர். அதேபோல், மழை காலங்களில் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் யாராவது மூழ்கினால், அவர்களை எவ்வாறு மீட்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலாபன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராமச்சந்திரன், உதவி அலுவலர் சதிஷ்குமார், பட்டதாரி ஆசிரியர்கள் பழனிவேல், பாலசுப்ரமணியன், தீயணைப்பு நிலைய வீரர்கள் கோபாலகிருஷ்ணன், ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.