/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல் விளக்கம்
/
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல் விளக்கம்
ADDED : மார் 25, 2025 04:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த செயற்முறை விளக்க பயிற்சி நடந்தது.
தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
நிலைய அலுவலர் சக்திவேல், சிறப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடையாமல் அருகில் உள்ள மணல், தண்ணீர் மற்றும் தீ அணைப்பான் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தல், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு முதலுதவி செய்தல், தீ அணைப்பு உபகரணங்களை பராமரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. செவிலியர்கள் தீ அணைப்பது குறித்து பயிற்சி பெற்றனர்.
மருத்துவமனை முதல்வர் பவானி, டாக்டர்கள் பொற்செல்வி, பழமலை, செவிலியர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டனர்.