ADDED : மார் 06, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் பரமசிவம் கலந்து கொண்டு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளித்து என்பவை குறித்து விளக்கி கூறினார்.
பின் மாணவர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
