/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடைக்குள் புகுந்த ஆந்தைகள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு
/
கடைக்குள் புகுந்த ஆந்தைகள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு
கடைக்குள் புகுந்த ஆந்தைகள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு
கடைக்குள் புகுந்த ஆந்தைகள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு
ADDED : மார் 11, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கடைக்குள் புகுந்த ஆந்தைகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, 30; இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை உரிமையாளர். இவரது கடைக்குள் நேற்று 2 ஆந்தைகள் புகுந்தன.
வெகுநேரமாக அவைகளை வெளியேற்றியும் கடைக்குள்ளேயே பறந்தன. தகவலறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் இருந்தை 2 ஆந்தைகளையும் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.