UPDATED : அக் 11, 2026 03:50 PM
ADDED : அக் 11, 2026 03:46 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தீச்சுடர் ஏந்தி தொடர் ஓட்டத்தை கலெக்டர், எஸ்.பி., கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார்.
எஸ்.பி., ஷஹ்னாஸ் முன்னிலை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் பொன்னரசு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் விளைவுகள் குறித்து பேசி, தொடர் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி தீச்சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடந்தது.
தொடர் ஓட்டமானது, மந்தைவெளியில் துவங்கி தீயணைப்பு நிலையம் வரை சென்று மீண்டும் மந்தைவெளி பகுதியில் முடிவடைந்தது.
அப்போது, ரெட் கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் இளையபெருமாள், செயலாளர் இமானுவேல் சசிக்குமார், பொருளாளர் சுரேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாயகண்ணன், ஜானகிராமன், நிர்வாக குழு உறுப்பினர்கள் துரை, கனிமொழி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
