/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு பணியை... துவங்கியது; பரிசு பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க தீவிரம்
/
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு பணியை... துவங்கியது; பரிசு பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க தீவிரம்
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு பணியை... துவங்கியது; பரிசு பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க தீவிரம்
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு பணியை... துவங்கியது; பரிசு பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க தீவிரம்
ADDED : மார் 18, 2024 06:22 AM

கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி பணம், பரிசு பொருட்கள் வழங்குவதைக் கண்காணித்து தடுக்க 40 பறக்கும் படை மற்றும் 40 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுத்தொகை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யும் பொருட்டு பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் வீதம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் பொருட்டு 40 பறக்கும் படை, 40 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படை குழுவில் ஒரு பி.டி.ஓ., அல்லது தாசில்தார் தலைமையிலான ஒரு சப் இன்ஸ்பெக்டர், 2 போலீசார், ஒரு வீடியோகிராபர் ஆகியோர் கொண்ட குழுவினர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் நிலை கண்காணிப்பு குழுவில் ஒரு துணை தாசில்தார் அல்லது துணை பி.டி.ஓ., நிலையான ஒரு தலைமை காவலர், 2 போலீசார், ஒரு வீடியோகிராபர் உள்ளிட்ட குழுவினர், குறிப்பிட்ட இடங்களில் நின்று வாகன சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களால் நடத்தப்படும் கூட்டங்கள், பிரசாரங்கள் மற்றும் ஊர்வலங்களில் ஏற்படும் செலவினத் தொகையை மதிப்பிடும் பொருட்டு தொகுதிக்கு ஒன்று வீதம் 4 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பறக்கும் படை, நிலையான மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவிற்கு வாகனங்களை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ்.பி., சமய்சிங் மீனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

