/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அஞ்சல் துறையில் எப்.ஓ., விற்பனை நிலையம்: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
/
அஞ்சல் துறையில் எப்.ஓ., விற்பனை நிலையம்: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
அஞ்சல் துறையில் எப்.ஓ., விற்பனை நிலையம்: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
அஞ்சல் துறையில் எப்.ஓ., விற்பனை நிலையம்: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : ஆக 04, 2025 01:22 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அஞ்சல் துறையில் எப்.ஓ., (பிரான்சிஸ் அவுட்லெட்) விற்பனை நிலையம் திறக்க விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எப்.ஓ., (பிரான்சிஸ் அவுட்லெட்) விற்பனை நிலையம் திறக்க விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். துணை அஞ்சலகம், தலைமை அஞ்சலகம் இல்லாத இடங்களிலும், தொலைவில் உள்ள இடங்களிலும் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்படும். இங்கு, ஸ்டாம்ப், ரெஜிஸ்டர்டு தபால், ஸ்பீடு போஸ்ட், மணி ஆர்டர் பதிவு செய்து அனுப்புதல் மற்றும் இதர சேவைகளையும் அஞ்சல் துறை சார்பாக வழங்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்திய குடியுரிமை பெற்ற நிறுவனமாகவும், இந்திய குடிமகனாகவும், தேவையான கட்டட வசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளையும் தாமே அமைத்துக்கொள்ள விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். அஞ்சல் துறையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார் கார்டு, பான் கார்டு, கணினி பயிற்சி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, 52 ஏ, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கடலுார் ரோடு, விருத்தாச்சலம் - 606 001 என்ற முகவரிக்கு வரும் 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களை 04143 - 263758 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

