ADDED : பிப் 16, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்,: சின்னசேலத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடந்த பயிற்சிக்கு துணை சேர்மன் அன்பு மணிமாறன் தலைமை தாங்கினார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் தாரணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா முன்னிலை வகித்தனர். நிர்வாக உதவியாளர் அன்பரசு வரவேற்றார்.
சுகாதாரமான முறையில் சத்தான மற்றும் சரிவிகித உணவு தயாரிப்பது குறித்தும் அதனை முறையாக பாதுகாத்து குழந்தைகளுக்கு வழங்குவது குறித்தும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

