/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பி.எல்.ஓ., செயலியில் படிவம் பதிவேற்றும் பணி : கலெக்டர் ஆய்வு
/
பி.எல்.ஓ., செயலியில் படிவம் பதிவேற்றும் பணி : கலெக்டர் ஆய்வு
பி.எல்.ஓ., செயலியில் படிவம் பதிவேற்றும் பணி : கலெக்டர் ஆய்வு
பி.எல்.ஓ., செயலியில் படிவம் பதிவேற்றும் பணி : கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 13, 2025 08:56 PM

கள்ளக்குறிச்சி: பெருவங்கூரில் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை பெற்று பி.எல்.ஓ., செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்களது பகுதியில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்கியுள்ளனர்.
தற்போது, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சேகரித்து, அதில் உள்ள தகவல்களை பி.எல்.ஓ., என்ற செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில், கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரில் நடந்த பணியினை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கள்ளக்குறிச்சி தாசில்தார் பசுபதி, வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

