/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகளிர் ஓட்டுக்களை கணிசமாக பெற தி.மு.க.,வில் துாரிகை குழு உருவாக்கம்
/
மகளிர் ஓட்டுக்களை கணிசமாக பெற தி.மு.க.,வில் துாரிகை குழு உருவாக்கம்
மகளிர் ஓட்டுக்களை கணிசமாக பெற தி.மு.க.,வில் துாரிகை குழு உருவாக்கம்
மகளிர் ஓட்டுக்களை கணிசமாக பெற தி.மு.க.,வில் துாரிகை குழு உருவாக்கம்
ADDED : நவ 25, 2024 11:20 PM
சட்டசபை தேர்தலில் மகளிர் ஓட்டுக்களை கணிசமாக பெறுவதற்காக தி.மு.க., வில் துாரிகை குழு உருவாக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, மகளிர் உரிமைத்தொகை, அரசு பஸ்களில் மகளிர் விலையில்லா பயணம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்குதல் என பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., வின் திட்டங்களால் பயனடைந்த மகளிர் ஓட்டுக்களை கணிசமாக பெறுவதற்கான பணியில் தி.மு.க., மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்காக, மகளிர் சுய உதவிக்குழுவை போல ஓட்டுச்சாவடி மையங்கள் வாரியாக துாரிகை குழு உருவாக்கப்பட்டு வருகிறது. குழுவில் ஒரு ஓட்டுச்சாவடியில் 10 - 15 பெண்கள் வரை இடம்பெறுவர்.
இதில், சேரும் பெண்கள் தங்களது ஆதார், புகைப்படம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். 30 அல்லது 35 ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு, ஒரு தலைமை பொறுப்பில் பெண் இருப்பர்.
தி.மு.க., வில் உள்ள சார்பு அணிகளை போல, துாரிகை குழுவில் உள்ளவர்களுக்கும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. அதில், சட்டசபை தேர்தல் பணி, வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்தல், அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லுதல், தங்கள் பகுதியில் உள்ள சிறு, சிறு பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சரிசெய்தல் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட உள்ளதாக தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.